For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்தமான் படகு விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு காங். சார்பில் ரூ. 1 லட்சம்

Google Oneindia Tamil News

டெல்லி: அந்தமான் கடலில் ஜனவரி 26ம் தேதி படகு கவிழ்ந்து பலியான 17 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ. 1 லட்சம் நிதியுதவியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

இந்த நிதியை காஞ்சிபுரம் எம்.பி. காசி விஸ்வநாதனிடம் அவர் அளித்தார். அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவியை வழங்குவார்.

ஜனவரி 26ம் தேதி அந்தமானுக்குச் சுற்றுலா போன இடத்தில் கடலில் படகு கவிழ்ந்து விபரீத விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 15 பேர் காஞ்சிபுரத்தையும், 2 பேர் சென்னையையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Sonia extends financial aid to Andaman boat tragedy victims

பலியானவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் காங்கிரஸ் எம்.பி காசி விஸ்வநாதன் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்ற சோனியா காந்தி தற்போது நிதியுதவியை அறிவித்துள்ளார்.

பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 1 லட்சம் நிதியை சோனியா காந்தி ஒதுக்கி அதை காசி விஸ்வநாதனிடம் ஒப்படைத்துள்ளார். அதை விஸ்வநாதன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வழங்குவார்.

English summary
Congress president Sonia Gandhi has extended financial aid to the families of Andaman boat tragedy victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X