வாய் கிழிய பேசுகிறது பாஜக.. அஸ்ஸாம் கூட்டத்தில் சோனியா தாக்கு
லக்கீம்பூர், அஸ்ஸாம்: எதிர்க்கட்சியான பாஜக மிகப் பெரிதாக பேசி வருகிறது, வாய் கிழியப் பேசுகிறது. ஆனால் துவேஷ அரசியலையே அது செய்து வருகிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் லக்கீம்பூரில் இன்று சோனியா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாஜகவை கடுமையாக தாக்கிப் பேசினார். அவர் கூறுகையில், காங்கிரஸ் கட்சி இந்த நாட்டின் கங்கா -யமுனா கலாச்சாரத்தை பலப்படுத்திய கட்சியாகும். ஆனால் பாஜக அதை பலவீனமாக்கி விட்டது.

எதிர்க்கட்சிகள் குறிப்பாக பாஜக, நாடு முழுவதும் சுற்றிச் சுற்றி வந்து வாய் கிழியப் பேசி வருகிறது. ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்தபோது எதையாவது செய்தார்களா.. அவர்கள் பேசுவதற்கும், செய்வதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.
நாங்கள் 2009ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவற்றில் கிட்டத்தட்ட அனைத்தையுமே நிறைவேற்றி விட்டோம். அதேபோலத்தான் 2014 தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளவற்றையும் நாங்கள் நிறைவேற்றுவோம், மக்கள் ஆதரவுடன்.
நாங்கள் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுப்பதில்லை. நாங்கள் சொல்ல மாட்டோம். செய்வோம்.
அஸ்ஸாமிலும், பிற பகுதியிலும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது வாழ்க்கையை இந்த நாட்டுக்காக அர்ப்பணித்தவரக்ள். சுதந்திரத்திற்கு முன்பும், பின்னரும் தங்களது வாழ்க்கையை இந்த நாட்டுக்கு ஒப்புக் கொடுத்தர்கள்.
சுதந்திரப் போராட்டத்தின்போது பாஜகவினர் எங்கே இருந்தனர். சுதந்திற்கு முன்பும் சரி, சுதந்திரப் போராட்ட காலத்திலும் சரி, பின்னரும் சரி அவர்களால் நாட்டுக்கு என்ன லாபம் கிடைத்தது. நாட்டைப் பிரித்தவர்கள்தான அவர்கள் என்றார் அவர்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!











Click it and Unblock the Notifications