பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சோனியா அளித்த பிரிவு உபச்சார விருந்து: ராகுல் ஆப்சென்ட்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த பிரிவு உபச்சார விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் புதன்கிழமை இரவு பிரிவு உபச்சார விருந்து அளித்தார். இந்த விருந்தில் காங்கிரஸ் தலைவர்களான ப. சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே, சல்மான் குர்ஷித், ஜோதிர்ஆதித்யா சிந்தியா, அஜய் மகேன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருந்தின்போது மன்மோகன் சிங்கிற்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இத்தனை முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட விருந்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. இது பலரையும் வியப்படைய வைத்துள்ளது.

இது குறித்து ராகுல் காந்தி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மன்மோகன் சிங்கிற்கு சோனியா பிரிவு உபச்சார விருந்து அளிக்கையில் ராகுல் வெளியூருக்கு செல்வதாக பிரதமரிடம் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ராகுல் கடந்த சனிக்கிழமை மன்மோகனை சந்தித்து பிரிவு உபச்சார விருந்தில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்பதை தெரிவித்துவிட்டார் என்று அஜய் மகேன் கூறினார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications