பாட்னா குண்டுவெடிப்பு கோழைத்தனமான செயல்... குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: சோனியா

பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்ததில், 5 பேர் பரிதாபமாகப் பலியானார்கள். மேலும், படுகாயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பாட்னா குண்டுவெடிப்பு குறித்து சோனியா காந்தி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். அதில், ‘இது ஜனநாயகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு கோழைத்தனமான செயல் ஆகும். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்' என அவர் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து அக்கட்சியின் தேசிய செயலாளர் திக்விஜய் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ‘பாட்னா குண்டு வெடிப்பு குறித்து மாநில அரசு தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இது நிதிஷ்குமார் அரசுக்கு கடும் சவாலாக இருக்கும்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications