குறைந்த விலையில் நிறைந்த சத்துக்களுடன் வருடத்திற்கு 181 முட்டைகள் போடும் ”நர்மதா நிதி” கோழிகள்!
போபால்: ஆண்டுக்கு 181 முட்டைகளை இடக்கூடிய விலை மலிவான, அதிக நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய நவீனவகை கோழியினத்தை மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கால்நடை அறிவியல்துறை ஆராய்ச்சியாளர்கள் மரபணு மாற்றத்தின் வாயிலாக உருவாக்கியுள்ளனர்.
இங்குள்ள ஜபுவா, அலிராஜூர் மாவட்டங்களில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காணப்படும் கடக்நாத் மற்றும் ஜபல்பூர் இனக்கோழிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து இந்த புதிய "நர்மதா நிதி" கோழிகள் உருவாக்கப்பட்டுள்ளனவாம்.
இதனை ஜபல்பூரில் உள்ள நானா தேஷ்முக் கால்நடை அறிவியல்துறை பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.

புரதச் சத்து ஜாஸ்தியாம்:
மற்ற கோழிகளைவிட புரதச்சத்து நிறைந்ததாக இந்த கோழிகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. நர்மதா நிதி எனப் பெயரிடப்பட்டுள்ள இவ்வகை கோழிகளுக்கு இதர கோழிகளுக்கு போடுவதுபோல் அவ்வப்போது அம்மை உள்ளிட்ட தடுப்பூசிகள் போட வேண்டிய அவசியமில்லை. வீடுகளில் மிச்சமாக உள்ள உணவுவகைகளை சாப்பிட்டே இவை உயிர்வாழும்.

வருடத்திற்கு 181 முட்டைகள்:
சாதாரண வளர்ப்புக் கோழிகள் ஆண்டுக்கு அதிகபட்சமாக 45 முட்டைகளை மட்டுமே இடும். ஆனால், இந்த நர்மதா நிதி கோழிகள் 181 முட்டைகள் வரை இடக்கூடியது.

4 ரூபாய்க்கே கிடைக்கும்:
தற்போது கடைகளில் நாட்டுக்கோழி முட்டைகள் 6 ரூபாய் விலையில் விற்கப்படும் நிலையில் இந்த கோழி முட்டைகள் 4 ரூபாய்க்கே கிடைக்கும்.

சல்லிசாக கிடைக்குமாம்:
மேலும், தற்போதைய சந்தை விலையின்படி ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 120 ரூபாயாக உள்ளது. "நர்மதா நிதி" கோழிகளை பண்ணை முறையில் வளர்த்தால் ஒருகிலோ இறைச்சி 80-90 ரூபாய்க்கு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications