நடிகை ஜியாவின் பிறப்புறுப்பில் கையை விட்டு கருவை எடுத்து டாய்லெட்டில் ஃபிளஷ் செய்த நடிகர் சூரஜ்
மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகை ஜியா கானின் பிறப்புறுப்பில் கையை விட்டு கலைந்து வந்த கருவை எடுத்து டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்துள்ளார் அவரது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி.
கஜினி இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்த ஜியா கான் பாலிவுட் நடிகர் சூரஜ் பஞ்சோலியை காதலித்தார். சூரஜின் கொடுமை தாங்க முடியாமல் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் மும்பை ஜுஹுவில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூரஜால் தான் கர்ப்பமானது பற்றியும், கருவை கலைத்தது பற்றியும், அவரால் தான் தற்கொலை செய்வதாகவும் ஜியா எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியது. ஜியாவை தற்கொலைக்கு தூண்டியதாக சூரஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சூரஜ்
சூரஜ் ஜாமீனில் வெளியே வந்து இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பிரபல நடிகர் ஒருவரின் மகளை காதலிப்பதாக வேறு கூறப்படுகிறது.

கொலை
ஜியா தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாகவும் அவரது தாய் ராபியா தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஜியாவின் வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்படி வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையை நேற்று தாக்கல் செய்துள்ளது.

கர்ப்பம்
ஜியாவுக்கு கருகலைப்பு நடந்தது பற்றி புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஜியா தான் 4 மாதம் கர்ப்பமான பிறகே சூரஜிடம் தெரிவித்துள்ளார். மருத்துவமனைக்கு சென்று கருவை கலைக்க முயன்றும் முடியவில்லை. இதையடுத்து மகப்பேறு மருத்துவரை அணுகி கருவை கலைக்க சக்திவாய்ந்த மருந்துகளை பெற்றுள்ளனர் ஜியாவும், சூரஜும்.

ரத்தப்போக்கு
மருந்துகளை உட்கொண்டதும் ஜியாவுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. வயிறு வலியால் துடித்த அவர் சூரஜை உதவிக்கு அழைத்துள்ளார். சூரஜ் வந்து ஜியாவின் நிலைமையை பார்த்து மகப்பேறு மருத்துவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு மருத்துவர் ஜியாவின் கரு கலைந்துள்ளது ஆனால் வெளியே வரவில்லை, அதனால் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து வாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கருகலைப்பு
ஜியாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அவரின் பிறப்புறுப்பில் கையை விட்டு கலைந்த கருவை வெளியே எடுத்து அதை டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்துள்ளார் சூரஜ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications