விலங்குகள் நல வாரிய தூதராக சௌந்தர்யா ரஜினி நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்திய விலங்குகள் வாரியத் தூதராக ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஐ.நா.சபையின் தென்னிந்தியாவுக்கான பெண்கள் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.

இப்போது சௌந்தர்யா ரஜினிக்கும் ஒரு சமூகப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் விலங்குகள் நல வாரிய அமைப்பின் தூதுவராக அவரை நியமித்து கடிதம் அனுப்பியுள்ளார் அந்த அமைப்பின் துணைத் தலைவர் சின்னி கிருஷ்ணா.
AWB எனும் இந்த அமைப்பின் அழைப்பை ஏற்று, தூதராகப் பணியாற்ற ஒப்புக் கொண்ட சௌந்தர்யாவுக்கு நன்றி கூறுவதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications