"பாகிஸ்தான் வாழ்க, மோடி ஒழிக"- கோஷம் போட்ட சமாஜ்வாதி கட்சிக்காரர் மீது தேசத் துரோக வழக்கு
லக்னொ: பாகிஸ்தான் வாழ்க என்றும், பிரதமர் நரேந்திரமோடியை ஒழிக என்றும் கோஷம்போட்ட சமாஜ்வாதி, கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் ஜின்ஜானா நகரை சேர்ந்தவர் மெக்மூத் ஆலம். சமாஜ்வாதி கட்சி பிரமுகர்.
இவர் மீரட்-கர்னால் பகுதிகளுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலையில் நின்றபடி, அவ்வழியாக செல்வோரை மிரட்டி, கட்சிக்கு நிதி திரட்டுவதாக கூறி, பணம் பறித்துக்கொண்டிருந்தார். இதை கேள்விப்பட்ட போலீசார், விரைந்து வந்து அவரை கைது செய்ய முற்பட்டனர்.
ஆனால், தன்னை ஆளும்கட்சி பிரமுகர் என்று கூறி போலீசாரை மிரட்டியுள்ளார் மெக்மூத் ஆலம். இருப்பினும், போலீசார் இதை காதில் போட்டுக்கொள்ளாமல் இவரை இழுத்துச் செல்ல முற்பட்டபோது, திடீரென 'பாகிஸ்தான் வாழ்க', 'நரேந்திரமோடி ஒழிக' என்று கோஷம் போட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த போலீசார், அவரை இழுத்து சென்று போலீஸ் நிலையத்தில் அடைத்தனர்.
பொதுமக்களை மிரட்டி பணம் பறித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் குறித்தும், பிரதமர் குறித்தும் மெக்மூத் கூறிய கருத்து, போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு எதிராக தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கும்படி உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications