'ஓவர் டேக்' செய்ததால் கடுப்பு.. லாரியை நிறுத்தி எருமை மாடுகளை 'பத்தி' விட்ட எம்.எல்.ஏ
ஜெய்ப்பூர்: தனது காரை எருமை மாடுகளை ஏற்றிச் சென்ற லாரி ஓவர் டேக் செய்ததால் கடுப்பாகிப் போன சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அந்த லாரியை நிறுத்தி அதில் இருந்த எருமை மாடுகளை கீழே இறக்கி வெளியேற்றி தனது டென்ஷனைக் காட்டிய செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கோபக்கார எம்.எல்.ஏவின் பெயர் ராஜ்குமார் யாதவ். ராஜஸ்தான் மாநிலம் சாதர் என்ற தொகுதியைச் சேர்ந்தவர். சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்தவர்.

இவர் சம்பவத்தன்று கோட்டா என்ற கிராமத்தின் வழியாக தனது காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது ஒரு எருமை மாடுகளை ஏற்றிய லாரி அவரது காரை ஓவர் டேக் செய்து வேகமாக சென்றது. இதைப் பார்த்த எம்.எல்.ஏ கோமடைந்தார். அந்த லாரியை துரத்திச் சென்று மடக்கி நிறுத்தினார்.
பின்னர் கோபத்துடன் சத்தம் போட்டபடி லாரியிலிருந்த எருமை மாடுகளை கீழே பத்தி விட்டார். விடுவிக்கப்பட்ட எருமைகள் வேகமாக ஓடத் தொடங்கின. இதைப் பார்த்த கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பலர் அந்த எருமை மாடுகளை தங்களது வீடுகளுக்குக் கூட்டிச் சென்றனர். தகவல் அறிந்ததும் மாடுகளின் உரிமையாளர்கள் ஓடி வந்தனர். போலீஸாரிடம் முறையிட்டனர்.
இந்த நிலையில் எம்.எல்.ஏ காவல் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அந்த எருமைகளை கொல்வதற்காக கூட்டிச் செல்வதாக அவர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். இந்த நிலையில் விரட்டி விடப்பட்ட எருமை மாடுகளை திரும்பப் பெறும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். வீடு வீடாகச் சென்று தயவு செய்து மாட்டைப் பிடித்து வந்திருந்தால் கொடுத்து விடுங்கள் என்று கிராமவாசிகளிடம் கெஞ்சிக் கேட்டனர். இதன் விளைவாக விரட்டி விடப்பட்ட 30 எருமைகளும் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் எம்.எல்.ஏவைச் சந்தித்த மாடுகளின் உரிமையாளர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகினார்கள். தங்களது மாடுகள் அருகில் உள்ள பால் பண்ணைக்குத்தான் போய்க் கொண்டிருந்ததாக அவர்கள் கூறினார்கள். பின்னர் சமரசம் ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications