குஜராத் கலவரத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டால் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு- சமாஜ்வாடி
லக்னோ: 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்சி தலைவரும், அமைச்சருமான ஆஸம் கான் தெரிவித்துள்ளார்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்திற்கு பாஜக பொறுப்பேற்றுக் கொண்டால் அந்த கட்சியை நாங்கள் ஆதரிப்போம் என்று சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஆலம் கான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தேர்தல் நேரத்தில் பாஜகவை கவர சமாஜ்வாடி கட்சி செய்யும் தந்திரம் இது என்பது அனைவருக்கும் தெரியாதது ஒன்றும் இல்லை.

சமாஜ்வாடி கட்சிக்கும், பாஜகவுக்கு இடையே உள்ள பிரச்சனைகள் அரசியல் வட்டாரத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்ததே. உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு பெருகி வரும் ஆதரவை பார்த்து தான் சமாஜ்வாடி கட்சி இப்படி தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் கூறுகையில்,
2002ம் ஆண்டு கலவரம் குறித்து எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் நாங்கள் மன்னிப்பு கேட்போம். ஆனால் அது நிரூபிக்கப்பட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications