For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடப்பாடி ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்: சு.சுவாமி திடீர் வலியுறுத்தல்

எடப்பாடி பழனிச்சாமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனபாலை முதல்வராக்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடீரென வலியுறுத்தியுள்ளார்.

சசிகலா, தினகரனை தீவிரமாக ஆதரித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. கடந்த சில நாட்களாகவே தினகரனுடன் ஸ்டாலின் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பார் என கூறி வருகிறார்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு

இது தொடர்பாக தொடர்ந்து ட்விட்டரில் பதிவுகளைப் போட்டு வருகிறார் சு.சுவாமி. இந்த நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சுப்பிரமணியம் சுவாமி நேரில் சந்தித்து பேசினார்.

தினகரன் -ஸ்டாலின் இணைந்து ஆட்சி

தினகரன் -ஸ்டாலின் இணைந்து ஆட்சி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, காங்கிரஸ், இடதுசாரிகளை விட்டு திமுக வெளியே வர வேண்டும். அப்படி நடந்தால் தினகரனுடன் ஸ்டாலின் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்றார்.

ஸ்டாலின் தவறு

இதனைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் இன்னொரு பதிவை இன்று பதிவிட்டுள்ளார் சுவாமி. அதில், காங்கிரஸ், இடதுசாரிகள், ஜிகாதிகளுடன் இணைந்து ஸ்டாலின் தவறு செய்துவிட்டார் என குற்றம்சாட்டியுள்ளார்.

முதல்வராக தனபால்

முதல்வராக தனபால்

அத்துடன் அதிமுகவின் ஒற்றுமையை பாதுகாக்க ஈபிஎஸ் தியாகம் செய்ய வேண்டும். சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

English summary
BJP Rajya Sabha MP Subramanian Swamy has suggested that Speaker Dhanapal be made the Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X