அடடா.. யாருமே கவனிக்கலையா? அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழில் எழுத்துப் பிழை!
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அழைப்பிதழின் முகப்பிலேயே எழுத்துப்பிழை இருப்பதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி நண்பகல் 12.20 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராமர் கோயில் அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் அட்டைகள், சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் அமைந்துள்ளன. இந்த அழைப்பிதழில் அயோத்தி ராமர் கோயிலின் படம், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் தொகுப்பில் அழைப்பிதழ் அட்டை, மூலவர் பிரதிஷ்டை நிகழ்ச்சி நிரல், ராமர் கோயில் இயக்கம் குறித்த கையேடு, ஸ்ரீ ராமரின் திருவுருவம், தலைமை வகிக்கும் விருந்தினர்கள் பட்டியல் இடம்பெற்றுள்ளது. ராமர் கோயில் சிலை பிரதிஷ்டையின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீராமஜென்பபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் ஆகியோர் பங்கேற்பார்கள் எனவும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் தற்போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான முக்கியஸ்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஆங்கில அழைப்பிதழில், "Invitation" என்பதற்குப் பதிலாக எழுத்துப் பிழையோடு, "Invitaion" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் விழாவிற்கான அழைப்பிதழின் முகப்பிலேயே, எழுத்துப் பிழை இருப்பதை விழாக் குழுவினர் யாருமே கவனிக்கவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications