For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்திஅர்ஜூனா காலமானார்

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்திஅர்ஜூனா இன்று அதிகாலை காலமானார்.

Google Oneindia Tamil News

மும்பை: இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக சார்பில் ஆஜரானவருமான டி.ஆர். அந்திஅர்ஜூனா இன்று அதிகாலை காலமானார்.

1933ஆம் ஆண்டு பிறந்த அந்திஅர்ஜூனா, மும்பையில் சட்டப் படிப்பை படித்து, தனது 38வது வயதில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இந்தியா சொலிசிட்டர் ஜெனரலாக உயர்ந்து 1996 ம் ஆண்டு முதல் 1998 வரை பணியாற்றினார். மேலும், மகாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞராக 1993ம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை அவர் பணியில் இருந்தார்.

Sr. Advocate TR Andhyarujina passed away

இந்திய அரசியல் அமைப்பில் மிக முக்கிய மாற்றம் ஏற்பட்ட வழக்கான கேசவானந்த பாரதி வழக்கில் ஆஜரானவர் அந்திஅர்ஜூனா. அதே போன்று ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக சார்பில் ஆஜரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய வழக்குகளை எதிர் கொண்ட அந்திஅர்ஜூனா தனது 83வது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 3.45 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது.

English summary
Senior Advocate TR Andhyarujina passed away at 4am today. His funeral will be held at 3.45 pm in Mumbai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X