ராஜபக்சேவின் இந்திய பயணத்துக்கு பின் ரொம்பவே மிரளும் இலங்கை.. இறங்கி வரத் தயார்!!

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே டெல்லி வந்திருந்தார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி ஈழத் தமிழர் பிரச்சனை,. மீனவர்கள் பிரச்சனை குறித்து காட்டமாகவே விவாதித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்குப் போன உடனேயே இந்தியாவின் சம்பூர் அனல்மின் திட்டத்தை உடனே விரைந்து முடிக்க வேண்டும் என்று ட்விட்டர் வழியே ராஜபக்சே கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இலங்கை அமைச்சர் நிமல சிறிபால டி சில்வா கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், இந்திய அரசின் வெளியுறவுத் துறை செயலர் வெளிப்படையாக அளித்த பேட்டியிலேயே 13வது அரசியல் திருத்தம் மற்றும் அதற்கு அப்பால் சென்று அரசியல் தீர்வு காண்போம் என்ற உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக சொல்லியிருக்கிறார்களே.. உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு நேரடியாக பதிலளிக்காத நிமல சிறிபால டி சில்வா, இந்திய பாரதிய ஜனதாவால் இலங்கை அரசுக்கு பிரச்சனைகள் உருவாகியிருப்பதாக சில ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. முந்தைய காங்கிரஸ் அரசை கையாண்டதைப் போல இலங்கை அரசு இப்போது செயல்பட முடியாது என்று சில ஊடகங்கள் சொல்கின்றன.
இன்னும் சில ராஜபக்சேவின் அரசாங்கமே இல்லாமல் போய்விடும் என்கின்றன. ஆனால் இலங்கை அதிபருக்கும் இந்திய பிரதமருக்கும் இடையேயான முதலாவது சந்திப்பு வெற்றிகரமாக இருந்தது. இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவதாக அமைந்தது.
இலங்கையின் நிலைப்பாட்டை இந்திய பிரதமர் மோடியிடம் ராஜபக்சே விளக்கினார். இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததையும் காதுகொடுத்து ராஜபக்சே கேட்டுக் கொண்டார்.
எங்களைப் பொறுத்தவரையில் பிரச்சனைகளுக்கு பேச்சுகள் மூலம் தீர்வு காண விரும்புகிறோமே தவிர முரண்பட்ட அரசியல் நிலைப்பாடுகள் மூலம் அல்ல.
இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், யுத்தம் முடிந்த காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக வந்திருக்கிறார். இலங்கை நிலவரங்களை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என நம்புகிறோம் என்றார்.
ரொம்பவே மிரண்டு கிடக்கிறதோ!
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications