'பப்' தாக்குதல் ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தலிக்கு கடும் எதிர்ப்பு- உறுப்பினர் சேர்க்கையை நிறுத்தியது
தார்வாட்: பெங்களூர் நகரில் பப்கள் மீது தாக்குதலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீராம் சேனாவின் தலைவர் பிரமோத் முத்தலிக்குக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை கட்சியில் சேர்க்கும் நடவடிக்கையை சில மணி நேரத்திலேயே பாஜக நிறுத்தி வைத்துவிட்டது.
2009ஆம் ஆண்டு பெங்களூர் நகரில் பப்கள் மீதும் அதில் நடனமாடிய பெண்கள் மீதும் ஸ்ரீராம்சேனாவினர் திடீர் தாக்குதலை நடத்தி நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தினர். இதேபோல் ஹிந்து கலாசாரம் என்ற பெயரில் பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டதாக ஸ்ரீராம் சேனாவின் தலைவர் முத்தலிக் மீது மட்டும் 45 வழக்குகள் பதிவாகி உள்ளன. அத்துடன் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த முத்தலிக்தான் இன்று ஹூப்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜக மாநில தலைவர் பிரஹ்லாத் ஜோஷி உள்ளிட்டோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தலிக், நரேந்திர மோடியை பிரதமராக்கவே தாம் பாஜகவில் இணைந்ததாக தெரிவித்தார்.
ஆனால் முத்தலிக்கை கட்சியில் சேர்க்க பாரதிய ஜனதாவில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. கோவா முதல்வர் பகிரங்கமாகவே முத்தலிக்கை பாஜகவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து முத்தலிக் கட்சியில் சேர்ந்த சில மணி நேரங்களிலேயே அவரது உறுப்பினர் சேர்க்கையை இடை நிறுத்தம் செய்ய பாஜக முடிவு செய்தது.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications