மதமாற்றம் செய்தால் கொன்றுவிடுவோம்.. ரவி சங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்
டெல்லி: வாழும் கலை என்ற அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தெரிக் இ தாலிபான் தீவிரவாத அமைப்புகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய சுற்றறிக்கை:
இந்த ஆண்டு மார்ச் மாதம், மலேசியாவுக்கு ரவிசங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் தங்கியிருந்த ஜென் ஹோட்டலின் மேலாளருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடிதம் அனுப்பினர்.

அதில், "இந்து மதக் கொள்கைகளை ரவிசங்கர் பரப்ப முயன்றால் அவரைக் கொல்வோம்; ஹோட்டலையும் அழிப்போம். தான் எந்த மதத்தையும் சாராதவர் என்று ரவிசங்கர் கூறினாலும், அவரது வாழும் கலை அமைப்பு ஈராக், ஈரான் நாட்டு முஸ்லிம்களை மதமாற்றம் செய்து வருகிறது' என்று அந்த கடிதத்தில் ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல் விடுத்திருந்தது.
மேலும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள வாழும் கலை அமைப்பின் அலுவலகத்தை தலிபான் தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது. எனவே, ரவிசங்கர் எந்த மாநிலத்துக்கு வந்தாலும் அவருக்கு முழு பாதுகாப்பை அளிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications