தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும்: மு.க.ஸ்டாலின் நம்பிக்கை
தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி: தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று மாலை சந்தித்தார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். அவருடன், டி.கே.எஸ்.இளங்கோவன், துரைமுருகன், திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்றிருந்தனர். சட்டசபையில் தி.மு.கவினர் தாக்கப்பட்டது குறித்தும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரியும் பிரணாப்பிடம் முறையிட்டார் ஸ்டாலின்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சட்டசபையில் நாங்கள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய மனு கொடுத்துள்ளோம். ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என முறையிட்டோம் எனக் கூறினார்.
அப்போது ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை ஆரம்பம் முதலே திமுக வலியுறுத்தி வருகிறது. தற்போது தான் ஓ.பன்னீர்செல்வமும், தீபக்கும் கேட்கிறார்கள் என்றும் ஜெயலலிதா குறித்த உண்மைகள் தற்போது தான் வெளி வந்துகொண்டிருக்கின்றன எனவும் கூறினார்.
மேலும் அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளிக்க மறுத்துவிட்டார். அதிமுக உள்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடாது. தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சி மலரும் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications