ஸ்டாலின்- தினகரன் இணைந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி: சு.சுவாமி பரபர தகவல்
ஸ்டாலினும் தினகரனும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பர் என சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் அதிமுக (அம்மா) துணைப் பொதுச்செயலர் தினகரனும் இணைந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 22 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

பெரும்பான்மையை நிரூபிக்க...
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும்; சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

98+22 எம்.எல்.ஏக்கள்
திமுக- காங்கிரஸ்- முஸ்லிம் லீக் கட்சிக்கு 98 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். தற்போதைய நிலையில் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்களும் எதிர்க்கட்சிகளும் இணைந்தால் பெரும்பான்மைக்கு தேவையான 117 எம்.எல்.ஏக்கள் எளிதாக கிடைத்துவிடும். ஆனால் அதிமுக- திமுக இணைந்து ஆட்சி அமைக்குமா? என்பதுதான் கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
|
சு.சுவாமி பரபர தகவல்
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் டிடிவி தினகரனும் இணைந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பரபரப்பான தகவலை பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஸ்டாலின் தரப்பும் தினகரன் தரப்பும் பேசி வருவதாக கூறப்படுகிறது.

பரபரப்பு
தற்போது இதை உறுதிப்படுத்தும் விதமாக சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் பதிவு அமைந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications