Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரியான் சர்வதேச பள்ளி வளாகத்தில் 7 வயது சிறுவன் கொலை: உறவினர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

குருகிராம்: குருகிராம் மாவட்டத்தில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியின் வளாகத்தில் நேற்று 7 வயதுடைய மாணவர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ரியான் சர்வதேச பள்ளியில் 2ம் வகுப்பு படித்த பிரதியுமான் என்ற 7 வயது சிறுவன் பள்ளி கழிப்பறையில் மர்மமான முறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

Student Found Dead In Toilet At RyanInternationalSchool Driver Arrested

சிறுவனை பாலியல் தொந்தரவு செய்து கொன்றதாக டிரைவர் அசோக் என்பவனை கைது செய்துள்ளனர். மாணவன் கொலை செய்யப்பட்டது பெற்றோர்கள், உறவினர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பெற்றோர், உறவினர்கள், மற்றும் இதர மாணவர்களின் பெற்றோரும் பள்ளி வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பள்ளி ஆசிரியர்கள், முதல்வர் உள்ளிட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். லட்சக்கணக்கில் டொனேசன் பெறும் நிர்வாகம்,மாணவர்களை பாதுகாக்க தவறியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+