என்ன இதெல்லாம்..? பிரதமர் மோடி பேச்சை கேட்காத மாணவர்களுக்கு அபராதம்.. பள்ளி மீது பரபர புகார்!
டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.100 அபராதம் விதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கு நோட்டிஸ் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக முதல் முறை பதவியேற்றார். அதன் தொடர்ச்சியாக மக்களுடன் வானொலி வாயிலாக 'மன் கி பாத்' நிகழ்வில் பேசி வருகிறார். இதன் முதல் ஒலிபரப்பு கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி விஜயதசமி பண்டிகையின்போது தொடங்கியது.

வாரந்தோறும் ஒவ்வொரு ஞாயிறு அன்று பிரதமர் நரேந்திர மோடி மக்கள் மத்தியில் வானொலி வாயிலாகப் பேசி வருகிறார். அதில் பலரால் கவனிக்கப்படாத மக்கள் சேவகர்கள், சாதனையாளர்களை சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளார். மனதின் குரல் உரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரையும் அடையாளப்படுத்தி உள்ளார் பிரதமர் மோடி.
மன் கி பாத்தின் 100வது எபிசோட் கடந்த ஞாயிறன்று ஒலிபரப்பானது. இந்த நிகழ்ச்சியையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதனை ஒலிபரப்பியது பாஜக அரசு. பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்களிலும் மன் கி பாத் 100வது எபிஸோட் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பள்ளி ஒன்றில், பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்க வராத மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.100 அபராதம் விதித்ததாக புகார் எழுந்துள்ளது. 'மன் கி பாத்' ஒலிபரப்பான அன்று பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அல்லது மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
மாணவர்களுக்கான பள்ளியின் வாட்ஸ் அப் குரூப்பில் அபராதத்திற்கான இந்த உத்தரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் புகார் தெரிவிக்க, இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை அந்த பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி, 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications