ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை
இளம்பெண்ணை எஸ்.ஐ. பலாத்காரம் செய்துள்ளார்
கான்பூர்: 5 பேர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தால், அதற்கு மேல் ஒரு அராஜகத்தை செய்து வைத்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.. இந்த அநியாயம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் ஜலாலாபாத் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த பெண்.. 35 வயதாகிறது.

கடந்த நவம்பர் 30ம் தேதி மதன்பூர் என்ற இடத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்... அப்போது, காரில் 5 பேர் அந்த வழியாக வந்துள்ளனர்.. ரோட்டில் நடந்து சென்ற இந்த பெண்ணை பார்த்ததும், அப்படியே அவரை இழுத்து சென்று காருக்குள் தள்ளிவிட்டு, கடத்திச் சென்றுவிட்டனர்.
அந்த பெண் காருக்குள் இருந்து அலறிய சத்தமும் வெளியே கேட்காதபடி, கார் கண்ணாடியை அடைத்துவிட்டனர்.. பிறகு, கொஞ்ச தொலைவில் ஆள்நடமாட்டம் இல்லாத வயலில் வைத்து அந்த பாலியல் பலாத்காரம் செய்து, அங்கேயே அந்த பெண்ணை விட்டுவிட்டு, இவர்கள் மட்டும் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
இதன்பிறகு பாதிக்கப்பட்ட பெண், மிகவும் சிரமப்பட்டு, புகார் அளிப்பதற்காக ஜலாலாபாத் ஸ்டேஷனுக்கு சென்றார்.. அப்போது டியூட்டியில் சப்-இன்ஸ்பெக்டர் இருந்துள்ளார்.. வந்த பெண்ணின் புகாரை கேட்டுவிட்டு, அப்பெண்ணை தன்னுடைய ரூமுக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்... நியாயம் கிடைக்கும் என்று ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணுக்கு மேலும் அதிர்ச்சிதான் கிடைத்தது.
அதன்பிறகு, பரெய்லி மாவட்ட ஏடிஜி அவினாஷ் சந்திராவை சந்தித்து நடந்த அத்தனையையும் அந்த பெண் சொல்லி அழுதார்.. அவர் கொடுத்த புகாரையும் பதிவு செய்த ஏடிஜி, நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.. இதுகுறித்த விசாரணையும் நடந்து வருகிறது.. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏடிஜி தெரிவித்துள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications