தேசிய கீதத்தை மாற்றி நேதாஜி பயன்படுத்திய வரிகளை இடம்பெறச் செய்ய வேண்டும்: மோடிக்கு சு.சுவாமி கடிதம்
டெல்லி: தேசிய கீதமான ஜன கண மன பாடலின் டியூனை வைத்துக் கொண்டு தற்போதைய வடிவத்துக்குப் பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பயன்படுத்திய பாடல் வரிகளை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கவனம் தற்போது நமது தேசிய கீதத்தின் பக்கம் திரும்பியுள்ளது. தேசிய கீதத்தின் டியூனை மட்டும் வைத்துக் கொண்டு அதன் வார்த்தைகளை மாற்ற வேண்டும் என மோடிக்கு சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மோடிக்கு கடந்த மாதம் கடிதம் ஒன்றையும் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஜன கண மன பாடல் டியூனை அப்படியே வைத்துக் கொள்வோம். ஆனால் தேசிய கீதத்தின் வரிகளை மட்டும் மாற்ற வேண்டும்.
அந்த வரிகளுக்கு பதிலாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்திற்காக எழுதிய பாடல் வரிகளை வைத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து நீங்கள் தான் நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 'ஆசாத் ஹிந்த்' என்ற சுதந்திர அரசையும் அமைத்திருந்தார். இதன் தேசிய கீதம் நமது தற்போதைய ஜனகன மண வடிவிலானது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளரை புகழும் வகையிலான அதிநாயகே போன்ற சில வார்த்தைகள் நீக்கப்பட்டு சற்றே மாற்றத்துடன் இருக்கும். இதையே தற்போது பயன்படுத்தலாம் என சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications