ஆம் ஆத்மி கட்சிக்கு Avaaz.org அமைப்பு 4 லட்சம் டாலர் கொடுத்தது: சு.சுவாமி குற்றச்சாட்டு

கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே பெருமளவு அக்கட்சி செலவு செய்து வருவது சர்ச்சையை கிளப்பிவிட்டது.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சிக்கான பணம் எங்கிருந்து வருகிறது என்பது குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. உடனே ஆம் ஆத்மி கட்சியினரோ, விசாரணையை எதிர்கொள்கிறோம். ஆனால் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு நிதி எங்கே வருகிறது என்றும் விசாரிக்க வலியுறுத்தியினர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, http://www.avaaz.org/en/ என்ற அமைப்பு மூலமாகவே ஆம் ஆத்மி கட்சிக்கு பணம் வருகிறது. இந்த அமைப்பின் மூலமாக 4 லட்சம் டாலர் பணம் ஆம் ஆத்மி கட்சிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பு அரபு நாட்டினருக்கும் உதவி செய்திருக்கிறது. இந்த அமைப்பான சமூக கிளர்ச்சிகளுக்காகவே நிதி உதவி செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியைப் பார்த்து அச்சப்படுகிற காங்கிரஸ் கட்சியின் இன்னொரு முகமாக ஆம் ஆத்மி கட்சி செயல்படுகிறது. 13 நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் பணம் பெற்றதாக கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால் யார் யாரிடம் இருந்து பணம் பெற்றதாக அவர் தெரிவிக்கவில்லை.
ஒரே வாரத்தில் 19 கோடி ரூபாயை வசூலித்திருப்பது சாத்தியம் இல்லை. அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒருவர்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு நிதி கொடுத்திருக்கிறார். இதுபற்றி விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications