ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு நாளில் கோர்ட்டுக்கு வருவாரா சுப்பிரமணியன் சாமி?
பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கும் நாளன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு சுப்பிரமணியன் சாமி வரப்போவதில்லை என்று தெரிகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இந்த வழக்கை ஆரம்பித்து வைத்தவர் என்ற முறையில் பாஜகவின் சமீபத்தில் இணைந்த சுப்பிரமணியன் சுவாமியும் பெங்களூர் வர உள்ளதாகவும், நீதிமன்றத்தில் அமர்ந்து தீர்ப்பை நேரில் கேட்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.

இதுகுறித்து பெங்களூர் காவல்துறையினரிடம் விசாரித்தபோது, அதுபோன்ற எந்த தகவலும் தங்களுக்கு வரவில்லை என்று தெரிவித்துவிட்டனர். ஏனெனில் சுப்பிரமணியன் சுவாமியும், ஜெயலலிதாவை போலவே இசட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர். அவர் ஒரு நகரத்துக்கு செல்வதாக இருந்தால் உள்ளூர் காவல் துறைக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்படும்.
ஆனால் பெங்களூர் காவல்துறைக்கு அதுபோன்ற எந்த தகவலும் சுப்பிரமணியன் சாமி தரப்பில் இருந்து வரவில்லையாம். எனவே சுப்பிரமணியன் சாமி கோர்ட்டுக்கு வரப்போவதில்லை என்று கூறப்படுகிறது. தன்மீது பல்வேறு ஊடகங்கள் வழியாக, சமீபகாலமாக சுப்பிரமணியன் சுவாமி பல அவதூறுகளை சுமத்தி வருவதாக கூறி ஜெயலலிதா தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் பல அவதூறு புகார்கள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோர்ட்டுக்கு சுப்பிரமணியன் சுவாமி வந்தால், அங்கு குவிந்திருக்கும் அதிமுககாரர்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடம், சட்டம் ஒழுங்கு கெடும் வாய்ப்புள்ளது. எனவே இந்த பயணத்தை சுப்பிரமணியன் சாமி தவிர்த்துவிட்டதாக தெரிகிறது. மேலும், சுப்பிரமணியன் சாமி இந்தப் புகாரின் ஆரம்பகட்டத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், வழக்கைப் பொறுத்தவரை வழக்கின் புகார்தாரர் தமிழக அரசுதானே தவிர சுப்ரமணியசாமி அல்ல. அதனால் கோர்ட்டில் அவர் ஆஜராக அனுமதியே கிடைக்காது என்கிறார்கள் கோர்ட் தரப்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications