மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.57 உயர்வு!
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.5.57-ஆக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதே சமயம், மானியமில்லா சமையல் எரிவாயு விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 5.57-ஆக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனால் ரூ.434.93-க்கு விற்கப்படும் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.440.50-ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச பெட்ரோலிய சந்தையில் விலை நிர்ணய நிலவரத்தின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை உயர்த்துவதும், குறைப்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரத்துக்குட்பட்டதாக உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.5.57 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இதனால் ரூ.434.93-க்கு விற்கப்படும் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.440.5-ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையோ ரூ.14.50- ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அவை ரூ.723-க்கு விற்கப்படும்.
கடந்த 2016-இல் செப்டம்பர் மாதம் டெல்லியில் ரூ.466.50-ஆக இருந்த மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.723 -ஆக உள்ளது. மேலும் விமானத்துக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் விலையில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 1000 லிட்டர் விமான பெட்ரோல் ரூ.2,811 குறைந்து ரூ.51, 248-க்கு விற்கப்படும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது போல் குறைத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications