கரை ஒதுங்கிய மனிதநேயம்... அய்லான் மரணத்தை மணற் சிற்பமாக செதுக்கிய சுதர்சன்!

Subscribe to Oneindia Tamil

புவனேஸ்வர்: கிரீஸ் நாட்டிற்கு அடைக்கலம் தேடிச் சென்ற இடத்தில் கடலில் மூழ்கி பலியான மூன்று வயது சிறுவன் அய்லானின் கோர மரணத்தை, மணற் சிற்பமாக தீட்டி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக். அந்த சிற்பத்தில், ‘மனிதநேயம் கரை ஒதுங்கிப் போனது. வெட்கம், கேவலம், அவமானம்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. எனவே, தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக சிரியாவின் கொம்பானி நகரில் இருந்து கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் துருக்கி சென்றார் அப்துல்லா குர்தி என்பவர். இவரது மனைவி ரெஹான், மூத்த மகன் காலிப் (5), இளைய மகன் அய்லான் (3).

Sudarsan creates sand art on Syrian boy

கனடா நாட்டில் அடைக்கலம் புக அனுமதி கேட்டார் அப்துல்லா. ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கிருந்து கள்ளப் படகில் கிரீஸ் புறப்பட்டார் அவர். ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் தஞ்சம் புகுந்து விடலாம் என்பது அப்துல்லாவின் திட்டம்.

துருக்கி கடல் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் திருட்டு படகில் பயணம் செய்யத் தொடங்கினார் அப்துல்லா. இதற்காக மூன்றரை லட்சம் ரூபாயை (5860 அமெரிக்க டாலர்) அவர் செலவழித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக ராட்சத கடல் அலையில் சிக்கி தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவர் இழந்தார்.

சிறுவன் அய்லான் கடற்கரையில் முகம் புதைந்த நிலையில் பிணமாக கிடந்த புகைப்படம் உலகையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது.

இந்த சம்பவத்துக்கு பின்னர், இரண்டே நாட்களில் அகதிகளாக வந்தேறும் மக்களுக்கு நான் இடம் தருகிறேன், நானும் இடம் தருகிறேன் என ஆஸ்திரியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் போட்டிப் போட்டுக்கொண்டு முன்வந்துள்ளன.

இந்நிலையில், இந்த மாபெரும் மாற்றத்துக்கான மூலக் காரணமாக அமைந்துவிட்ட சிறுவன் அய்லானின் மரணத்தை இந்தியாவைச் சேர்ந்த பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரைப் பகுதியில் மணற் சிற்பமாக வடித்துள்ளார்.

அந்த சிற்பம் காண்பவர்களின் நெஞ்சை கசக்கிப் பிழியும் நிலையில் அமைந்துள்ளது. அதோடு அந்த மணல் சிற்பத்தின் அருகே, "மனிதநேயம் கரை ஒதுங்கிப் போனது. வெட்கம், கேவலம், அவமானம்" (Humanity Washed Ashore / Shame, Shame, Shame) என அவர் செதுக்கி இருக்கும் வாசகங்கள் உலக நாடுகளுக்கு சவுக்கடியாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+