வீரமரணமடைந்த 26 வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்!
சத்தீஸ்கரில் வீரமரணமடைந்த 26 சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ஏற்க முன்வந்துள்ளார்.
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்கள் தாக்குதலால் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் ஏற்க முன்வந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் அடர்ந்த காட்டு பகுதியில் 150-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்ஸல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் 26 வீரர்கள் வீரமரணமடைந்தனர். அவர்களில் 4 பேர் தமிழர்களாவர். இந்த வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் ஏற்க கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் முன்வந்துள்ளார்.
கௌதம் கம்பீர் அறக்கட்டளையின் மூலம் 26 வீரர்களின் படிப்பு செலவை ஏற்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவரது மேலாளர் தெரிவித்தார். இதுகுறித்து கம்பீர் கூறுகையில், ராணுவ வீரர்கள் நாட்டுக்கு செய்யும் சேவை ஈடு இணையற்றது. அண்மையில் நடந்து வரும் தாக்குதல்களால் வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து வருவது வேதனை அளிக்கிறது.
இதனால் ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதால் சத்தீஸ்கரில் உயிரிழந்த 26 வீரர்களின் குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications