சுனந்தா கொலை வழக்கில் மகன் ஷிவ் மேனனிடம் டெல்லி போலீசார் தீவிர விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் அவரது மகன் ஷிவ் மேனனிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் ஆல்பிராக்ஸ் மருந்தை அளவுக்கதிகமாக எடுத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி அண்மையில் தெரிவித்தார்.

அதன் பிறகு சுனந்தாவின் வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக தரூர், சுனந்தாவுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்டோரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சிறப்பு விசாரணைக் குழுவினர் சுனந்தா புஷ்கரின் மகன் ஷிவ் மேனனிடம் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். துபாயில் வசிக்கும் ஷிவ் விசாரணைக்காக டெல்லி வந்துள்ளார்.
சுனந்தாவின் மூன்றாவது கணவர் தரூர். இரண்டாவது கணவருக்கு பிறந்தவர் தான் ஷிவ் மேனன். ஷிவ் மேனனிடம் என்னென்ன விவகாரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் என்று விவரம் வெளியிடப்படவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications