‘ஐ லவ் யூ சசி... சிரித்துக் கொண்டே விடை பெறுகிறேன்...’ சுனந்தாவின் கடைசி டுவிட்டர் பதிவுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மர்மமான முறையில் மரணமடைந்துள்ள மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தாவின் கடைசி நேர டுவிட்டர் பதிவுகள் அவரது மனது எவ்வளவு காயப் பட்டிருந்தது என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

3 ஆண்டு கால மண வாழ்க்கைக்கு மத்தியில், சசிதரூர் மீது பாகிஸ்தான் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கு ஏற்பட்ட காதல் தான், சுனந்தாவின் மரணத்திற்குக் காரணம் என சொல்லப் பட்டாலும், அவரது மரணம் இயற்கையானதா இல்லை கொலையா என்பது குறித்த மர்மம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சுனந்தா மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டிருந்தார் என அவரது நண்பர்கள் வட்டம் தெரிவித்துள்ளது. அதனை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது அவரது கடைசி சில டுவிட்டர் பதிவுகள்.

இதோ அவை குறித்தான சிறிய தொகுப்பு...

விடைபெறுகிறேன்....

விடைபெறுகிறேன்....

விதிப்படி எது நடக்க வேண்டுமோ, அது நடந்தே தீரும். நான் சிரித்துக்கொண்டே விடைபெறுகிறேன்.

அந்தரங்க விவகாரம்....

அந்தரங்க விவகாரம்....

இது ஒரு அந்தரங்க விவகாரம் (மெஹர் தரர் விவகாரம்). இது ஏன் தலைப்புச்செய்தி ஆக்கப்படுகிறது? மெஹர் பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது 5 நிமிட பிரபலத்தால் எனக்கு எல்லா பிரச்சினைகளும் வந்து சேர்ந்திருக்கின்றன.

மோசமான விசயம்....

மோசமான விசயம்....

இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் ஆண் அல்ல. மனைவி சிகிச்சைக்கு வெளியே சென்றபோது, ஆணை வீழ்த்தியவர் பெண்தான். எவ்வளவு மோசம்!

சசியின் ஆசை....

சசியின் ஆசை....

எனது கணவர் அவளுடன் இருக்க விரும்புகிறார். கடைசியாக நான் ஒருவள்தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

ஐ லவ் யூ சசி....

ஐ லவ் யூ சசி....

‘உங்களை நேசிக்கிறேன் சசி'

நான் பொய் சொல்லவில்லை...

நான் பொய் சொல்லவில்லை...

மெஹர் முழுப்பொய் சொல்கிறார். நான் பொய் சொல்ல மாட்டேன். தற்போது நான் உடல் நலக்குறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் ஒரு நாள் பேசுவேன். அது மெஹருக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

கெஞ்ச வைக்காதீர்கள் சசி...

கெஞ்ச வைக்காதீர்கள் சசி...

ஒரு பெண்ணின் துடுக்குத்தனம், வெறித்தனமாக ஒரு இந்தியருடன் காதலை ஏற்படுத்துமா? சசி, தயவு செய்து என்னை வாதாட வைக்காதீர்கள். கெஞ்ச வைக்காதீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன் சசி' என இவ்வாறு அந்த ‘டுவிட்டர்' பதிவுகள் தெரிவிக்கின்றன.

டுவிட்டர் மூலம் அம்பலம்...

டுவிட்டர் மூலம் அம்பலம்...

சசி தரூருக்கும், மெஹர் தராருக்கும் இடையேயான காதல் மயக்கம் பற்றிய தகவல்கள், சுனந்தா தரூர் ‘டுவிட்டர்' சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுத்தான் வெளியுலகுக்கு தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

வார்த்தைப் போர்...

வார்த்தைப் போர்...

ஆனால், அதை மெஹர் தரூர் மறுத்திருக்கிறார். தொடர்ந்து சம்மந்தப்பட்ட மூவர் இடையே ‘டுவிட்டர்' வழியாக வார்த்தைப்போர் நடந்து வந்திருக்கிறது.

கூட்டு அறிக்கை...

கூட்டு அறிக்கை...

இந்த நிலையில், தாங்கள் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருவதாகவும், ‘டுவிட்டர்' வலைத்தளத்தில் உருவான சர்ச்சை தகவல்களால் தாங்கள் மனவருத்தம் அடைந்திருப்பதாகவும் சசி தரூர்- சுனந்தா கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

தொடரும் மரணம்....

தொடரும் மரணம்....

ஆனால், கடந்த வெள்ளியன்று சுனந்தா ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணம் இயற்கையானது அல்ல என பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+