சுனந்தா கொலை வழக்கு: மகனிடம் இன்று டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கில் அவரின் மகன் ஷிவ் மேனனிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி அண்மையில் தெரிவித்தார்.

இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் சசி தரூரிடம் சுனந்தா வழக்கு குறித்து 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனிடம் போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.

சுனந்தாவின் மூன்றாவது கணவர் தான் தரூர். சுனந்தாவின் இரண்டாவது கணவர் மூலம் பிறந்தவர் ஷிவ் மேனன்.
தனக்கும் சுனந்தாவுக்கும் இடையே பிரச்சனை இல்லை, எப்போதாவது தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று தரூர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே பலநேரங்களில் கடும் மோதல் நடந்ததை பலர் பார்த்துள்ளனர்.
தரூருக்கும், சுனந்தாவுக்கும் இடையே இருந்த பிரச்சனை பற்றி ஷிவ் மேனனிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். தன்னை யாராவது மிரட்டியது அல்லது ஐபிஎல் விவகாரம் பற்றி சுனந்தா ஷிவ் மேனனிடம் எதுவும் தெரிவித்தாரா என்பது பற்றியும் போலீசார் விசாரிக்க உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications