"அல்லாஹூ அக்பர்".. முஸ்லிம்களுடன் யார்னு பாருங்க.. ஒரே நாளில் நடந்த சம்பவம்.. ஹைலைட்டே இதுதான்..!
முஸ்லிம்கள் நடத்திய தொழுகையின் போட்டோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது
ஸ்ரீநகர்: இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே ரம்ஜான் மாதத்தில் மத வேறுபாடுகளின்றி தனது படைப்பிரிவினருடன் தொழுகை நடத்தினார். அப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டது.
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, சிறுபான்மையினருக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. நாட்டில் சுமார் 90 மாவட்டங்களில் சிறுபான்மையினர் அதிக அளவில் வருகிறார்கள்.
இதில், 338 டவுன் பகுதிகளில் இத்தகைய சிறுபான்மையினரின் மக்கள் தொகை 25 சதவீதத்திற்கு மேல் காணப்படுகிறது.. சுருக்கமாக சொன்னால், மொத்த மக்கள் தொகையில் 25 சதவீதத்துக்கும் மேல் சிறுபான்மையினராக உள்ளனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்..

பசுக்கள்
எனவே, இவர்களின் வாக்குகளை பாஜக உட்பட எந்த கட்சியினராலும் தவிர்த்துவிட முடிவதில்லை. அதேசமயம், இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதிருப்திகள் உள்ளன.. அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன என்றும், சிறுபான்மை இனத்தவர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறி விட்டது என்றும்கூட பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன.எனவே, இவர்களின் வாக்குகளை பாஜக உட்பட எந்த கட்யினராலும் தவிர்த்துவிட முடிவதில்லை. அதேசமயம், இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும் அதிருப்திகள் உள்ளன.. அவர்களது வழிபாட்டு தலங்களும், சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன என்றும், சிறுபான்மை இனத்தவர் மீது பசு பாதுகாவலர்கள் நடத்தும் தாக்குதல்களை மத்திய அரசு தடுக்க தவறி விட்டது என்றும்கூட பல்வேறு விமர்சனங்கள் காணப்படுகின்றன.

சூப்பர் போட்டோ
இத்தகைய சூழலில்தான் ஒரு உருக்கமான சம்பவத்தை நம் ராணுவத்தினர் நடத்தி காட்டி உள்ளனர்.. நாடு முழுவதும் முஸ்லிம்கள் ரம்ஜான் மாதத்தை தற்போது கடைப்பிடித்து வருகினற்னர்.. அந்த வகையில், ராணுவத்தினர் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில், மத வேறுபாடுடின்றி தொழுகை நடத்திய போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் விறுவிறுப்பாக பரவி வருகிறது.. அந்த போட்டோதான் பார்த்துவிட்டு, பொதுமக்கள் பூரித்து போய் உள்ளனர்..

ஜெனரல் பாண்டே
பார்ப்பவர்கள் எல்லாம் தங்கள் மனம் நிறைந்த பாராட்டுக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. ராணுவத்தில் படை வீரரிலிருந்து அதிகாரிகள் நிலை வரை முஸ்லிம்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்... இப்படி ஒரு தொழுகையை ஏற்பாடு செய்தவர் 15வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே... இந்த தொழுகை நடத்திய அந்த போட்டோவின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? சீக்கியர் ஒருவரும், பல ஏராளமான இந்துக்களும் சேர்ந்து தொழுகையில் ஈடுபட்டதுதான்.

மத மோதல்கள்
காஷ்மீரில் மத மோதல்கள் ஏராளமாக வெடித்து வரும் நிலையில், அங்கு ராணுவம் அனைவருக்குமானது என்பதை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்த தொழுகையை செய்துள்ளனர்... அதனால்தான் மக்கள் நெகிழ்ந்து வரவேற்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.. இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை உடைய நாடு என்பது நாம் அறிந்த ஒன்று என்றாலும், இதுபோன்ற நிகழ்வுகள்தான் நாட்டு மக்களை மேலும் இணக்கமாக்கி வருகிறது.

மதநல்லிணக்கம்
அதுமட்டுமல்ல, மதத்தின் பெயரால் இனி யார் பிளவை உண்டாக்கினாலும் சரி, அல்லது பிளவை உருவாக்க முயற்சித்தாலும்சரி, இதுதான் "மதநல்லிணக்கம்".. இது தான் நம்முடைய இந்தியா.. இதுதான் மதச்சார்பற்ற நாடு என்பதற்கு வேறு என்ன உதாரணம் இருக்க முடியும்? இந்திய ராணுவத்தில் உள்ள அனைத்து மதச்சார்பற்ற மரபிற்கும் நம்முடைய ராயல் சல்யூட்..!












Click it and Unblock the Notifications