"அது" வேற வெளியே தெரிஞ்சிடுச்சே.. கரெக்ட்டா தாலி கட்டும்போது இப்படி ஆயிடுச்சே.. இவரும் ஒரு பெண்ணா?
கான்பூர்: கல்யாண பெண்ணின் பெயர் குஷி.. மணமேடையில் இந்த பெண் செய்த காரியத்தை பாருங்க.. இப்ப குஷி முகத்தில் குஷியே போயிடுச்சு...!!
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.. மாநில மக்களுக்கு பல்வேறு அறிவிப்புகளையும், திட்டங்களையும் வழங்கி வருகிறார் முதல்வர் யோகி.

அந்தவகையில், திருமண சட்டத்தின்கீழ் ஏழை பெண்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அந்த ஜோடிகளுக்கு சீர்வரிசையாக பரிசு பொருட்களும், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது.
சீர்வரிசைகள்: அதன்படி, மொத்தமாக ஒரு ஜோடிக்கு 51 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அவற்றில் 35 ஆயிரம் ரூபாய் நேரடியாக மணமகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இதைத்தவிர, அந்த ஜோடிக்கு பரிசு பொருட்களாக 10 ஆயிரம் ரூபாய் பணமும், திருமண நிகழ்ச்சி செலவுக்காக 6 ஆயிரம் ரூபாய் பணம் ஒதுக்கப்படும்.
இந்த திட்டத்துக்கு அம்மாநிலத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. யோகியின் தலைசிறந்த திட்டங்களில், பிரதான இடத்தில் இந்த திட்டமும் இடம்பெற்று வருகிறது.
கல்யாண பெண்: அந்தவகையில், கடந்த பிப்ரவரி 27ம் தேதி, ஜான்சி நகரில் 32 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.. இதில் ஒரு ஜோடியின் பெயர் குஷி - ரிஷ்வான்.
ரிஷ்வான் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்.. திருமணத்தன்று எல்லா ஜோடிகளும் மணமேடைக்கு வந்துவிட்டார்கள். குஷியும் வந்துவிட்டார்.. ஆனால், மாப்பிள்ளையை காணோம்..
மணமக்கள்: மணமகன் குறித்த நேரத்தில் வந்து சேரவில்லை. இதனால் மணமகள் குஷி தவித்து போனார்.. மணமகன் வராததைவிட, மணமகனால் கிடைக்க போகும் 35 ஆயிரம் ரூபாய் கிடைக்காமல் போய்விடுமே என்று டென்ஷன் ஆகிவிட்டார்.. முகூர்த்த நேரமும் நெருங்கி கொண்டே வந்ததால், வேறு வழியின்றி, கல்யாணத்துக்கு வந்திருந்த தன்னுடைய சொந்தக்கார இளைஞரை கல்யாணம் செய்து கொள்வதாக குடும்பத்தாரிடம் சொன்னார்..
அடுத்த செகண்டே அந்த இளைஞரையும் சம்மதிக்க வைத்து, தாலியும் கட்டிக் கொண்டார் குஷி.. பிறகு, திருமணம் முடிந்ததுமே, அரசு வழங்கிய பணப்பலன்கள், சீர்வரிசை பொருட்கள் ஒன்றுவிடாமல் வாங்கி கொண்டார்.
மாப்பிள்ளை எங்கே: எல்லாம் நடந்து முடிந்தபோதுதான், குஷியின் இந்த மோசடி, அரசு அதிகாரிகளுக்கு தெரியவந்தது.. கடைசி நிமிடத்தில் மாப்பிள்ளையை தேர்வு செய்தாரா? என்று அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டார்கள்.
இப்போது இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த திட்டத்தின் கீழ் ஜோடிகளின் ஆதார் அட்டைகள் சரியாக இருக்கின்றனவா என்றெல்லாம் சரி பார்க்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
லாஸ்ட் மினிட்: அதன்படியே மணமக்களிடம் விசாரணை நடத்தப்பட்டது... லாஸ்ட் நிமிடத்தில் மாப்பிள்ளை தயார் செய்யப்பட்டதால், ஆதார் கார்டு நடைமுறைகள் எல்லாம் சரியாக பின்பற்றவில்லை என்பதும் உறுதியானது.
அப்பறமென்ன? குஷிக்கு வழங்கப்பட்ட எல்லா பணப்பலன்களும், பரிசு பொருட்களும் அப்படியே வாபஸ் வாங்கி கொண்டு போய்விட்டார்கள் அதிகாரிகள்.. இப்போ குஷி முகத்தில் குஷியே இல்லை..!!
பாஜக எம்எல்ஏ: இதே திருமண நலத்திட்டத்தை வைத்து, சமீபத்தில்கூட மோசடிகள் நடந்துள்ளன.. பலியா மாவட்டத்தில் உள்ள மணியா நகரில் கடந்த மாதம் பாஜக எம்எல்ஏ கேட்கி சிங் முன்னிலையில் இந்த திட்டத்தின்கீழ் திருமண நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ஒரே இடத்தில், ஒரே நேரத்தில், 568 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.. ஆனால், கல்யாணத்தில் பங்கேற்க போதிய பெண்கள் இல்லாததால், பல வருஷத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்ட பெண்களையும், அவர்களது கணவர்களையும் அழைத்து வந்து, அவர்களை மறுபடியும் மணமக்களாக நிறுத்தியிருக்கிறார்கள்.
மணமக்கள்: கடைசியில், அதிமான பெண்கள் மணமேடையில் மணமகன் இல்லாமல் தனியாகவே நின்று கொண்டிருந்தனர்... அவர்கள், திருமண சடங்குகளை தாமாகவே செய்தும், மாலை அணிவித்து கொண்டதும் அரங்கேறியது..
அதுமட்டுமல்ல, முன்பின் தெரியாத நபர்கள் தம்பதிகள் போல் நடித்து மாலையை அணிவித்து கொண்டார்கள். சில திருமண ஜோடிகள், அண்ணன்-தங்கச்சிகளாக நின்று கொண்டிருந்தார்களாம். நிகழ்ச்சி முடிந்ததுமே, அங்கிருந்த ஜோடிகள் "தனித்தனியாக" கலைந்து சென்றுவிட்டார்களாம்.
இதில் ஹைலைட் என்னவென்றால், மணமகன், மணமகள் போல நடித்தவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை லஞ்சம் தரப்பட்டதாம். இதெல்லாம் சோஷியல் மீடியாவில் வீடியோவாகவே வெளிவந்தது.
நலத்திட்டங்கள்: அந்தவரிசையில்தான், இப்போது கல்யாண பெண் குஷியும் சிக்கி உள்ளார்.. உ.பி முதல்வர் யோகி, நல்லது நினைத்துதான் இப்படியான நலத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார்... ஆனாலும் இப்படிப்பட்ட மோசடி பேர்வழிகளை என்ன செய்வது??












Click it and Unblock the Notifications