பேசாமல், தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிடுங்களேன்.. உச்ச நீதிமன்றம் கோபம்
தாஜ்மஹாலைப் தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதை மூடிவிடுங்கள் அல்லது இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் முகலாய மன்னர் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. தாஜ்மஹாலைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் மூலம் மத்திய அரசு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டிவருகிறது.

இத்தகைய புகழ்மிக்க தாஜ்மஹால் இருக்கும் பகுதியில் நிறைய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளது. இதனால், வெள்ளை பளிங்கு கல்லால் ஆன தாஜ்மஹால் மாசுபாட்டால் தற்போது நிறம் மங்கி செம்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
அதனால், தாஜ்மஹாலை பாதுகாக்கக் வேண்டும் எனவும் இது குறித்து மத்திய அரசுக்கு அறிவுறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று புதன் கிழமை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி எம்.பி.லோகூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கூறியதாவது:
உலகின் பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகின்றனர். ஈபிள் டவர் உள்ளிட்ட உலக அதிசயங்களை பாதுகாக்க பிறநாடுகளில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
அதே நேரத்தில் தாஜ்மஹாலை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி உருவாகிறது. இந்தியாவில் எத்தனையோ அதிசயங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. அத்தகைய தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரிய இழப்புதான்.
ஆகையால், தாஜ்மஹாலை முறையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாஜ்மஹாலை மூடிவிடலாம். அல்லது அதை இடித்து தள்ளி விடலாம் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications