'சங் பரிவார'த்தின் பாசிச கருத்தை வலுப்படுத்துகிறது இடஒதுக்கீட்டுக்கு எதிரான உச்சநீதிமன்ற கருத்து
டெல்லி: மருத்துவ உயர்படிப்புகளில் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது "இந்துத்துவாவின் குரல்"தான் என்று சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
உயர்கல்வி துறையில் ஜாதி, மதம், இருப்பிடம் என்கிற அடிப்படைகளிலான இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்து தகுதி அடிப்படையில் வாய்ப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து முஸ்லிம் கல்வி வாரியத்தின் தலைவர் ஃபாசல் கஃபூர் கூறியுள்ளதாவது:

இடஒதுக்கீடு வழங்கப்பட்டு 68 ஆண்டுகளாகிறது என்கிறது உச்சநீதிமன்றம். இது முற்றிலும் தவறானது. இந்த கருத்தை தெரிவித்திருக்கும் நீதிபதிகள் வரலாற்றை படிக்க வேண்டும்.
1980ஆம் ஆண்டுகளிலேயே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷன் விவாதங்கள் நடைபெற்றாலும் 1990ஆம் ஆண்டுகள் வரை அது நடைமுறைக்கு வரவில்லை.
1995ஆம் ஆண்டுதான் மாநிலங்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த தொடங்கின. இது தேசிய அளவில் 2005ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மண்டல் கமிஷன் 27% இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. ஆனால் நடைமுறையில் மத்திய அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோரின் சதவீதம் என்பது வெறும் 8% ஆகத்தான் இருக்கிறது.
இவ்வாறு ஃபாசல் கஃபூர் கூறியுள்ளார்.
இதேபோல் ஆதிவாசி கோத்ரா மகாசபாவின் தலைவர் கீதானந்தன் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் இந்த கருத்தே அரசியல் சாசனத்துக்கு எதிரானது. அத்துடன் இடஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சிக்கும் சங் பரிவாரங்களின் பாசிச கருத்தை வலுப்படுத்துவதாகும்.
தற்போதைய சூழலில் இடஒதுக்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையே இல்லை. இன்னமும் ஜாதிவாரியான கணக்கெடுப்பு விவரங்களை மத்திய அரசு வெளியிடவில்லை... அப்படியான நிலையில் ஜாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications