ப்ளூவேலை தடை செய்ய சாப்ட்வேர் கண்டுபிடிங்க.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய மென்பொருள் உருவாக்கும் நிபுணர் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ப்ளூவேல் விளையாட்டு போன்ற உயிருக்கு ஆபத்தான விளையாட்டை தடை செய்ய நிபுணர் குழுவை அமைத்து சிறப்பு மென்பொருளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைனில் விளையாடப்படும் ப்ளூவேல் விளையாட்டு இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் கொடூர விளையாட்டாக நாடு முழுவதும் பலரின் உயிரைக் காவு வாங்கியுள்ளது. இந்த விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ப்ளூவேல் விளையாட்டு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். ப்ளூவேல் விளையாட்டைத் தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
ப்ளூவேல் விளையாட்டை கட்டுப்படுத்தும் பயர்வால் என்ற தடுப்பரண் மென்பொருளை உருவாக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார். அப்படி அந்த மென்பொருள் மூலம் ப்ளூவேல் விளையாடுவதை தடுக்கலாம் என்றால் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்து அந்த மென்பொருளை உருவாக்கலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ப்ளூவேல் விளையாட்டை கட்டுப்படுத்த கூகுள், முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மைக்ரோசாஃப்ட் மற்றும் யாஹூ ஆகிய நிறுவனங்களிடம் ப்ளூவேல் விளையாட்டை அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதே போன்று ப்ளூவேல் விளையாட்டை தடை செய்ய வழி இருக்கிறதா என்று ஆராய மத்திய மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications