அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்ய சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு!
அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லி: அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அமைச்சர் காமராஜ் எஸ்விஎஸ் குமார் என்ற ஒப்பந்ததாரரிடம் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அமைச்சர் காமராஜ் மீது உச்சநீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ரமணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டார். உடனடியாக அமைச்சர் மீது காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டார்.
இல்லையெனில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் மே 3ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications