தமிழகம், கேரள கோவில்களில் யானைகள் வதையா?.. 6 வாரங்களுக்குள் கணக்கெடுப்பை முடிக்க நீதிமன்றம் உத்தரவு
டெல்லி : தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கோவில் யானைகள் வதைக்கப்படுவதாக மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பயன்படுத்தப்படும் யானைகள் குறித்த கணக்கெடுப்பை 6 வாரங்களுக்குள் முடிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட பொது நலன் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் மீட்பு அமைப்பு தாக்கல் செய்த மனுவில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகவில் உள்ள கோவில்களில் யானைகள் வதை செய்யப்படுவதாகவும், அதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
யானை பராமரிப்பு மற்றும் கோவில்களில் பயன்படுத்தும் யானைகள் குறித்து விளக்கத்தை தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பானுமதி அடங்கிய அமர்வு கேரளாவில் கோயில்களில் பயன்படுத்தப்படும் யானைகள குறித்த கணக்கெடுப்பை இதுவரை தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும் 6 வாரங்களுக்குள்ளாக அனைத்து மாநில அரசும் யானைகள் குறித்த கணக்கெடுப்பை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications