ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக தடை கேட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி!
டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அரசு வக்கீலாக பவானி சிங் ஆஜராவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக நடைபெற்ற சொத்துக்குவிப்பு வழக்கில் முதலில் அரசு வக்கீலாக ஆஜரானவர் ஆச்சாரியா. பிறகு பவானிசிங் அந்த பதவிக்கு வந்தார்.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த செப்டம்பர் 27ம்தேதி, தீர்ப்பளித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்.

இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை, கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்றது. அதில் அரசு தரப்பு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். வாதத்தின் இறுதியில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் அளிக்க தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பவானிசிங் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் ஹைகோர்ட் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுத்தது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தத்து தலைமையிலான பெஞ்ச், ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் வக்கீல் மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், "சிறப்பு நீதிமன்றத்தில் அரசு வக்கீலாக செயல்படுவதற்கு மட்டுமே பவானிசிங்கிற்கு அனுமதியுண்டு. அவர் உயர் நீதிமன்றத்திலும் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதிடுவதற்கு அனுமதி கிடையாது. எனவே வேறு அரசு வக்கீலை நியமிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications