ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.. மாநிலத்தில் 2 அதிகார மையங்கள் இருக்க கூடாது.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
டெல்லி: மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்கக் கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு 3 வாய்ப்புகளில் ஒன்றை தேர்ந்தெடுப்பதே ஒரே வாய்ப்பு என்றும் தீர்ப்பளித்திருக்கிறது.
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர், ஆளுநர் தரப்புக்கு காலக்கெடு நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி உச்சநீதிமன்றம் தரப்பில், ஆளுநர் நீண்ட காலத்திற்கு மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், அதனை சட்டசபைக்கு ஆளுநர் திருப்பி அனுப்ப வேண்டும். நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால், அதனை சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
ஒரு சட்டப்பிரிவுக்கு 2 வகையான வாய்ப்பு இருந்தால், எது சுமூக நிலையோ, அதையே பின்பற்ற வேண்டும். ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் என்பது மசோதானை ஆய்வு செய்ய நிறுத்தி வைப்பது அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது தான். ஆளுநர் காரணத்தை தெரிவிக்காமல் நீண்ட காலம் மசோதாவை நிறுத்தி வைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பொதுவாக அமைச்சரவையின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.
அரசியல் சட்டம் சில தனி உரிமைகளை ஆளுநருக்கு வழங்கி இருக்கிறது. காரணமின்றி மசோதாவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், ஜனாதிபதிக்கு அனுப்பலாம் அல்லது சட்டசபைக்கு திருப்பி அனுப்பலாம் ஆகிய 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. 3ல் ஒன்றை தேர்ந்தெடுப்பதே ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அமைச்சரவையுமே முடிவெடுக்கும் இடத்தில் இருக்கும். ஒரு மாநிலத்தில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க கூடாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது. மத்திய அரசு கூறுவதை போல் ஆளுநருக்கு மசோதாக்களை நிறுத்தி வைக்கும் 4வது வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications