கல்யாண பெண்ணை பார்க்க.. திருமண ஊர்வலத்துடன் கிராமத்துக்கு கிளம்பி போன மணமகன்.. காத்திருந்த சம்பவம்
ஷிம்லா: மணப்பெண் கிராமத்திற்கு, மணமகளை பார்ப்பதற்காக ஆசை ஆசையாக வந்தார் மாப்பிள்ளை.. அதுவும், திருமண ஊர்வலத்துடன் ஊருக்குள் வந்தவருக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மாப்பிள்ளை இன்னமும் மீளவில்லையாம்.
இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள நாரி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் இந்த இளைஞர்.. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.. அதனால், இவரது பக்கத்து வீட்டுக்காரரான ராஜிவ் என்பவரின் மனைவி மனு என்பவர், இளைஞருக்காக ஒரு பெண்ணை வரன் பார்த்துள்ளார்.

திருமண ஏற்பாடு: மணப்பெண் அருகிலுள்ள சிங்கா கிராமத்தை சேர்ந்தவர். இதையடுத்து, அப்பெண்ணும், இளைஞரும் ஒருவருக்கொருவர் நேரில் சந்திக்காமலேயே போனிலேயே பேசி வந்துள்ளனர்.. ஒருகட்டத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.. இதையடுத்து, மணமகனுக்கும் மணமகளுக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த முழு ஏற்பாட்டையும் செய்தது, ராஜீவ் மற்றும் அவரது மனைவி மானு தம்பதிகள்தான்.. இவர்கள் இருவருமே புரோக்கர்கள் ஆவர்.. மணப்பெண், மணமகள் இருவரிடமும் சம்மதம் பெற்று இந்த திருமண ஏற்பாட்டை செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக மணமகளை அழைத்து வருவதற்காக சிங்கா கிராமத்துக்கு மணமகன் வீட்டார் 10 கார்களில் கிளம்பி சென்றார்கள்.. அதில் மாப்பிள்ளையும் ஒருவர்... முதல்முதலாக மணப்பெண்ணை நேரில் பார்ப்பதற்காக ஆர்வமுடன் வந்திருந்தார்.
மணப்பெண் ஊர்: திடீரென 10, 15 கார்கள் ஊருக்குள் வருவதை பார்த்த கிராம மக்கள், நீங்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.. அதற்கு மாப்பிள்ளை வீட்டினர், திருமண ஊர்வலத்துக்காக வந்துள்ளோம், இந்த ஊரில்தான் பெண் எடுத்துள்ளோம்.. இதுதான் பெண்ணின் போட்டோ என்று சொல்லி, பெண்ணின் புகைப்படத்தை செல்போனில் காட்டினார்கள்.
அந்த போட்டோவை பார்த்த கிராம மக்கள், இப்படியொரு பெண் எங்கள் கிராமத்தில் கிடையாது,.. நீங்கள் சொல்வது போல இங்கே எந்த திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.. இதைக்கேட்டு மாப்பிள்ளைக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் தலையே சுற்றிவிட்டது. பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பக்கத்துவீட்டு புரோக்கர் தம்பதிக்கு போனை போட்டு விஷயத்தை சொன்னார்கள்..
தம்பதி: உடனே அந்த தம்பதியினர், "நீங்கள் எல்லாரும் அங்கேயே இருங்கள், நாங்களே அந்த கல்யாணப் பெண்ணை, காரில் அழைத்து வருகிறோம்" என்று சொல்லிவிட்டு, தப்பித்து ஓடிவிட்டார்கள்.. இந்த திருமண ஏற்பாட்டிற்காக, முன்கூட்டியே 50 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணத்தையும் அந்த தம்பதியினர் பெற்று விட்டார்களாம். இப்போது அந்த தம்பதி எங்கே என்று தெரியவில்லை.. போட்டோவில் காட்டிய மணப்பெண் யார் என்றும் தெரியவில்லை.
மணமகள் இல்லாமலேயே, திருமண ஊர்வலம் நடத்தி வந்து ஏமாந்துபோன மணமகள் குடும்பத்தினர், என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர்.. அதற்குள் தகவலறிந்து வந்த போலீஸார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்..
செல்போன் நம்பர்: உடனே போலீசார், செல்போன் நம்பரை டிராக் செய்து, அந்த புரோக்கர் தம்பதியினரிடம் பேசினார்கள்.. அப்போதும் அந்த தம்பதியினர், "மணப்பெண் திடீரென விஷத்தை குடித்து விட்டார், அதனால் அவரை பஞ்சாபிலுள்ள நவன்ஷெகர் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம்" என்று மீண்டும் பொய்யான தகவல்களை சொல்லி உள்ளனர்.
இதனால் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த மாப்பிள்ளை வீட்டினர், அந்த புரோக்கர் தம்பதியினரை வலைவீசி தேடினார்கள்.. இறுதியில், மானுவை சுற்றி வளைத்து பிடித்த சிங்கா கிராமத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விநோதம்: இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க ரூ.50,000 வாங்கியதாகக் கூறப்படும் ராஜிவ் மற்றும் மனு தம்பதியினரிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மணமகளே இல்லாமல் இமாச்சல பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலம் நடந்துள்ள வினோதமான சம்பவம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications