எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் சுஷ்மா சுவராஜ்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்.
டெல்லி: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்.
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். அதனையடுத்து, சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் சிறுநீரகம் செயலிழந்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளேன். தற்போது எனக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பதிவிட்டிருந்தார்.

உறவினர்களின் சிறுநீரகங்கள் அவருக்கு பொருந்தாத நிலையில், வெளியில் இருந்து சிறுநீரகம் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. உரிய அனுமதியுடன் வெளிநபரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு பொருத்தப்பட்டு கடந்த 10ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களாக மருத்துவமனையிலேயே இருந்து வந்தார். சிகிச்சை முடிந்த பின் சுஷ்மாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையும் தெரிவித்து வந்தது. இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications