சவுதி, குவைத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்களுக்கு உதவ ஏற்பாடு - சுஷ்மா சுவராஜ்
டெல்லி: சவுதி அரேபியா மற்றும் குவைத்தில் வேலை இழந்து தவித்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத் போன்ற அரேபிய நாடுகளில் வேலைக்கு சென்ற இந்தியர்கள் அங்கு வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

சவுதி நகரான ஜெட்டாவில் கடந்த 3 நாட்களாக சுமார் 800 இந்தியர்கள் வேலையை இழந்த நிலையில் உண்ண உணவின்றி தவித்து வரும் இந்திய தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு இந்திய வெளியுறவுத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுஷ்மா தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "சவுதி அரேபியாவில் வேலையை இழந்த இந்தியர்களுக்கு உணவு வழங்க கேட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக சவுதி அரேபியா மற்றும் குவைத் அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்திய தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க மத்திய அமைச்சர் வி.கே.சிங் விரைவில் சவுதி அரேபியா செல்ல உள்ளதாகவும் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications