இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் புறப்பட்டார் சுஷ்மா சுவராஜ்
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு சுஷ்மா சுவராஜ் முதல் முறையாக செல்கிறார் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் செல்லும் சுஷ்மா அந்நாட்டு மூத்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதனால் இரு தரப்பு உறவுகள் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட துறைகளில் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவை கொண்டுள்ளது இந்தியா. இந்நிலையில், முதல்முறையாக இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சுஷ்மாவின் இந்த பயணம் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் சென்று திரும்பியது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications