ரூபாய் நோட்டு தட்டுப்பாடு: நாடு முழுவதும் சுங்க கட்டணம் ரத்து நவ. 24 வரை நீட்டிப்பு !
சுங்க கட்டணங்கள் ரத்து நவம்பர் 24-ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் நவம்பர் 24-ந் தேதி நள்ளிரவு வரை சுங்க கட்டணத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 8-ந் தேதி நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் பணப்புழக்கம் தடைபட்டுப் போயுள்ளது. திடீரென அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமலும் தேவைக்கேற்ப வங்கி மற்றும் ஏடிஎம்களில் பணத்தை எடுக்க முடியாமலும் 1 வாரத்திற்கும் மேலாக பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாடு தழுவிய அளவில் சுங்கக் கட்டணங்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்த சுங்கக் கட்டண ரத்து இன்று நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது நவம்பர் 24-ந் தேதி நள்ளிரவு வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
முன்னதாக நவம்பர் 14, 18ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை சுங்க கட்டணம் ரத்து நீட்டிக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்னும் ரூபாய் தட்டுப்பாடு இயல்பு நிலைக்கு திரும்பாததால் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டுக்கப்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications