மம்தாவை வீழ்த்தியவர்.. மேற்கு வங்கத்தில் பாஜகவின் முதல் முதல்வரானார் சுவேந்து அதிகாரி.. யார் இவர்?
கொல்கத்தா: நடந்து முடிந்த மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மம்தா பானர்ஜியின் தொடர்ச்சியான 15 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தி மேற்குவங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. பாஜகவின் புதிய முதல்வராக சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இன்று முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ஆர்என் ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜியை வீழ்த்திய இந்த சுவேந்து அதிகாரி யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தை போல் மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடந்தது. கடந்த 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 147 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் இதில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

மொத்தம் 207 தொகுதிகளில் பாஜக வாகை சூடியது. முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.
15 ஆண்டு மம்தா ஆட்சி முடிவு
அதுமட்டுமின்றி முதல்வர் மம்தா பானர்ஜியியும் தேர்தலில் தோற்றார். பாபனிபூர் தொகுதியில் களமிறங்கிய மம்தா பானர்ஜி மொத்தம் 58,812 ஓட்டுகள் வாங்கினார். அவரை எதிர்த்து களம் இறங்கிய பாஜகவின் சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகள் வாங்கி மம்தா பானர்ஜியை 15,105 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
இதன்மூலம் மேற்கு வங்கத்தில் கடந்த 2011, 2016, 2021 என்று 3 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. அதோடு மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
முதல்வரான சுவேந்து அதிகாரி
இதையடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்யும் பணியில் பாஜக மேலிடம் ஈடுபட்டது. அதில் புதிய முதல்வராக மம்தா பானர்ஜியை வீழ்த்திய சுவேந்து அதிகாரி தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இன்று சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராகவும், மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராகவும் இன்று பதவியேற்றார். கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி, சுவேந்து அதிகாரிக்கு பதவி பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி பங்கேற்பு
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பிற அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பிற பாஜக தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். பதவியேற்பையொட்டி விழா நடக்கும் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
யார் இந்த சுவேந்து அதிகாரி
இன்று முதல்வராக பொறுபேற்ற சுவேந்து அதிகாரி மேற்கு வங்க மாநிலத்தின் மெதினிபூர் மாவட்டம் புர்வா பகுதியில் பிறந்தவர். 56 வயது ஆகிறது. இவரது குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பமாகும். இவரது அப்பா சிசிர் அதிகாரி முன்னாள் எம்பி. இதனால் சுவேந்து அதிகாரி தொடககத்தில் காங்கிரஸில் பயணித்தார். அதன்பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உருவாகும்போது அந்த கட்சியில் சேர்ந்தவார். படிப்படியாக மம்தா பானர்ஜியின் நம்பிக்கையை பெற தொடங்கினார்.
வளர்த்துவிட்ட மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜியின் நம்பிக்கை பெற்ற நபராக மாறினார். அரசியலில் முக்கியத்துவம் கொடுத்து அவரை மம்தா பானர்ஜி வளர்த்துவிட்டார். 2016ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல அமைச்சர்கள், நிர்வாகிகள் வேலைக்கு பணம் வாங்கியது தொடர்பான 'ஸ்டிங் ஆபரேஷனில்' சிக்கினர். அதில் சுவேந்து அதிகாரியும் சிக்கினார். அதன்பிறகு அவருக்கும் மம்தா பானர்ஜிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
2வது முறை மம்தாவை வீழ்த்திய சுவேந்து
2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சுவேந்து அதிகாரி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமானார். 2021 சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராம் மற்றும் பாவனிபூர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேவேளையில் மம்தா பானர்ஜி பாவனிபூர் தொகுதியில் வென்று ஆட்சியை பிடித்தார். ஆனால் இந்த முறை மம்தா பானர்ஜி பாவனிபூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில் சுவேந்து அதிகரி அங்கு பேட்டியிட்டு அவரை வீழ்த்தி தற்போது முதல்வராகி உள்ளார்.
-
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications