திருப்பதியில் விஐபி தரிசனம் செய்த நித்யானந்தா – ரஞ்சிதா
திருப்பதி: சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா.
இவர் சாமியார் நித்யானந்தாவுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. நித்யானந்தாவின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டன. கர்நாடக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

குரு – பக்தை உறவு
இதற்கிடையே தனக்கும், நித்யானந்தாவுக்கும் இடையே குரு- பக்தை உறவு மட்டுமே இருப்பதாகவும், சிலர் தேவையில்லாமல் அவதூறு கிளப்பி வருவதாகவும் ரஞ்சிதா கூறினார்.

தீட்சை பெற்ற ரஞ்சிதா
பெரும் சர்ச்சைகளுக்கு பின்னர், சில மாதங்களுக்கு முன் நித்யானந்தாவிடம் முறைப்படி தீட்சிதை பெற்று ரஞ்சிதா சன்னியாசி ஆனார்.

திருப்பதி தரிசனம்
இந்த நிலையில் ரஞ்சிதா உள்ளிட்ட சீடர்களுடன் நித்யானந்தா திருப்பதி கோவிலுக்கு சென்றார். அங்கு விஐபி பிரேக் தரிசனத்தில் அவர்கள் ஏழுமலையான தரிசித்தனர்.

சாமியார் தோற்றத்தில்
அப்போது ரஞ்சிதா காவி உடை அணிந்து நீளமான மாலையை அணிந்திருந்தார். சாமியார் போலவே தோற்றமளித்தார்.

ஆசி வழங்கிய நித்தியானந்தா
நித்யானந்தா தனது கழுத்தில் தங்க நகைகளை அணிந்து இருந்தார். அங்குள்ள பக்தர்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. எனினும் சிரித்தவாறே ஆசீர்வாதம் வழங்கிவிட்டு நித்யானந்தா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications