'சோட்டா ராஜன்' கைது நடவடிக்கையை லீக் செய்தாரா வி.கே.சிங்.? சு.சுவாமி ட்விட்டரால் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கைது செய்யப்படும் நடவடிக்கையை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமியிடம் முன்னரே லீக் செய்தாரா? என்ற சர்ச்சை வெடித்துள்ளது.

Swamy tweet trouble to VK Singh

மத்திய அமைச்சர்களில் வாய் துடுக்காக பேசி வம்பில் சிக்குபவர்கள் பலர் உள்ளனர். இவர்களில் வி.கே.சிங்கும் ஒருவர். அண்மையில் ஹரியானாவில் 2 தலித் குழந்தைகள் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தை நாய்களோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கைது செய்யப்பட்ட செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

அதில் "சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு நான் வி.கே.சிங்கிடம் போனில் பேசிய போது அவர் இந்தோனேசியாவில் இருப்பதை கண்டுபிடித்தேன்" என்று போட்டிருக்கிறார்.

இந்த ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது அரசு ரகசியங்களை சுப்பிரமணியன் சுவாமியிடம் வி.கே.சிங் கூறுகிறாரா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இது ஒன்றும் அரசு ரகசியம் இல்லை.... சோட்டா ராஜனை கைது செய்ததன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பதைத்தானே வெளிப்படுத்துகிறது என ஒருசிலரும் பதிவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+