கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழா! மகிழ்ச்சியில் ஸ்டாலினை மறந்த ராகுல்! போட்டோவுக்கு போஸ் சொதப்பல்!
பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு வைபவம் முடிந்ததும், விழா மேடையிலேயே தலைவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிகழ்வு சொதப்பலானது.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் காண்டீரவ மைதானத்தில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்கள்.

இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
அந்த வகையில் முக ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ், மெஹபூபா முப்தி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, சரத்பவார், அனில் தேசாய், கமல்ஹாசன், திருமாவளவன், முஸ்லீம் லீக் பிரமுகர்கள் மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பதவியேற்வு விழா முடிந்த கையோடு பாஜகவுக்கு மெசேஜ் சொல்லும் விதமாக ஒற்றுமையாக கரம் கோர்த்து தலைவர்கள் நிற்கும் புகைப்படம் எடுக்கப்பட்டது.

அதில் ராகுல்காந்தி அருகே ஸ்டாலின் நின்று கொண்டிருந்த நிலையில் பிரியங்கா காந்தியை தனது அருகே அழைத்து ஸ்டாலினை மறந்துவிட்டார் ராகுல்.
இதனால் தலைவர்கள் எடுத்த குழு புகைப்படத்தில் ஸ்டாலின் முகம் தெரியாத வகையில் பின்னுக்கு தள்ளப்பட்டார். இது கவனக்குறைவு காரணமாகவும், மறதியாலும் ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வு என்றாலும் ஸ்டாலினின் முகம் மாறியது.
எல்லா தலைவர்களும், ஸ்டாலினும் ஒன்றா என்று கேட்டால் நிச்சயம் ஒன்றல்ல. ஏனெனில் ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு சற்று ஸ்பெஷலானவர் தான். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய பலரும் தயங்கிய போது முதல் ஆளாக ராகுலை பிரதமர் வேட்பாளராக சென்னையில் நடந்த விழாவில் முன் மொழிந்தவர் ஸ்டாலின்.

அதுமட்டுமல்ல மம்தா, தெலுங்கானா முதல்வர் கேசிஆர் போன்றோர் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நிற்பதோடு மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
காங்கிரஸ் கட்சிக்காக அவர் தேசியளவில் இவ்வளவு செய்தும் அவரை விழா மேடையில் முன்னிலைப்படுத்தி பெருமைப்படுத்தியிருக்க வேண்டிய ராகுல், மகிழ்ச்சியில் மறந்து வரலாற்றுப்பிழை செய்துவிட்டார்.
ஸ்டாலினை பிரதமராக வேட்பாளராக பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் முன்னிலைப்படுத்தி வரும் நிலையில் அவரை குழு புகைப்படத்தில் இருட்டடிப்பு செய்த நிகழ்வு நிச்சயம் தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது உறுதி.
-
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications