4 பேரால் சீரழிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம்: ரூ.50,000 வாங்கிக் கொண்டு கருவை கலைக்க பஞ். உத்தரவு
பாட்னா: பீகாரில் 4 சகோதரர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி கர்ப்பமாக உள்ளார். நியாயம் கேட்டவரை ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு கருவை கலைக்குமாறு பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாக்கோலா பாலாஷ்மணி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி 4 சகோதரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் தற்போது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து அவர் நீதி கேட்டு பஞ்சாயத்தை அணுகினார். ஆனால் பஞ்சாயத்தாரோ ரூ.50 ஆயிரம் பணத்தை வாங்கிக் கொண்டு கருவை கலைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

பஞ்சாயத்தார் கருவை கலைக்குமாறு மிரட்டியதை அடுத்து சிறுமியின் தாய் போலீசில் இது குறித்து புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியின் தந்தை தனது குடும்பத்தை காப்பாற்ற ராஜஸ்தானில் வேலை செய்து வருகிறார். சிறுமியின் தாய் விவசாய கூலி.
இந்நிலையில் இது குறித்து போலீஸ் அதிகாரி ஸ்வேதா குப்தா கூறுகையில்,
தன்னை 4 சகோதரர்கள் சேர்ந்து 7 மாதங்களுக்கு முன்பு பலாத்காரம் செய்ததாகவும், அதனால் தான் தற்போது 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் சிறுமி தெரிவித்தார். நான் கிஷன்கஞ்சில் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து 5 சிறுமிகள் பெரும்பாலும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இது போன்று பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமானதாக புகார் தெரிவித்தனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சிறுமிகள் தாங்கள் பலாத்காரம் செய்யப்பட்டதை கர்ப்பமாகும் வரை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளனர் என்றார்.
கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் வாழும் மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் முஸ்லீம்கள். மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று. இங்கு வறுமையால் வாடுவோர் அதிகம். மேலும் கல்வி அறிவு மிகவும் குறைவாக உள்ள மாவட்டம் கிஷன்கஞ்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications