கனமழை எதிரொலி! திருப்பதி சாமி தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்கள்.. மழையில் சிக்கிக்கொண்டு தவிப்பு

Subscribe to Oneindia Tamil

அமராவதி: திருப்பதி நகர் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு சாமி தரிசனம் செய்து சென்ற தமிழக பக்தர்கள் மழையில் மாட்டிக் கொண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

தெற்கு ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் கூட அங்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

பக்தர்கள்

பக்தர்கள்

குறிப்பாகத் திருப்பதி திருமலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்கு பல்வேறு இடங்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மேலும், பல முக்கிய சாலைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்குச் சென்ற பக்தர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர்.

அனுமதி இல்லை

அனுமதி இல்லை

திருமலையில் சாமியை பார்க்கவம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் பக்தர்களை அங்கு குடோனில் காக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குழந்தைகள் அங்கு அதிகமாக உள்ளதால் பால் தேவை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். கனமழையால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் முற்றிலுமாக முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பக்தர்கள் கோரிக்கை

பக்தர்கள் கோரிக்கை

இதனால் பக்தர்களுக்கு உணவு மற்றும் குழந்தைகளுக்குப் பாலை கோயில் நிர்வாகம் உடனடியாக ஏற்பாடு செய்து தர பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குக் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குச் சாமி தரிசனம் செய்து சென்ற தமிழக பக்தர்கள் மழையில் மாட்டிக் கொண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து நிறுத்தம்

போக்குவரத்து நிறுத்தம்

முன்னதாக கனமழையால் திருப்பதி மலைக்குப் பாத யாத்திரையாகச் செல்ல பயன்படுத்தப்படும் மலைப் பாதை செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது சாலை போக்குவரத்து மட்டும் இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் பாறை சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் திருப்பதி - திருமலை இடையேயான சாலை போக்குவரத்தும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. திருமலை - திருப்பதி இடையேயான சாலை போக்குவரத்து குறித்து பிறகு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+